கோவையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்- மாவட்ட ஆட்சியர் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு...

published 8 months ago

கோவையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்- மாவட்ட ஆட்சியர் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு...

கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை நகராட்சி அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தை  மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்து பல்வேறு பகுதிகளில் கள ஆய்வுகள் மேற்கொண்டார். 

மேலும் அப்பகுதி மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட அவர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக மனுக்கள் மீது விரைந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

மேலும் பள்ளிகளுக்கு செல்லாமல் இருந்த மாணவர்களிடமும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு உயர்கல்வி படிக்காமல் இருந்த மாணவ மாணவிகள் இடமும் நேரடியாக வீடுகளுக்கே சென்று அது குறித்து கேட்டறிந்து அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து மதுக்கரை நகராட்சி அலுவலக கட்டுமான பணிகள் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் நிர்வாகக் கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடப் பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மதுக்கரை அரசு மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார். 

மேலும் மதுக்கரை அரசு பள்ளியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவர் மாணவர்களின் வருகை குறித்தும் பள்ளியில் இடையில் நின்ற மாணவர்களின் விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவருக்கு 6000 ரூபாய் மதிப்பிலான காதொலி கருவியினை வழங்கி 20 பயனாளர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe