கோவை-சென்னை ரயில் சேவையில் மாற்றம்!

published 8 months ago

கோவை-சென்னை ரயில் சேவையில் மாற்றம்!

கோவை: பொறியியல் பணிகள் காரணமாக கோவை-சென்னை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை சென்ட்ரலில் ரயில்வே பொறியியல் பணிகள் காரணமாக பின்வரும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுகிறது.

1. ரயில் எண்.12676 கோயம்புத்தூர் - சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ், 19ம் தேதி முதல் 26ம் தேதி வரை, கோவையில் இருந்து மதியம் 3.15 மணிக்குப் புறப்படும். இந்த ரயில் சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படாமல், பெரம்பூர் ரயில் நிலையம் வரை இயக்கப்படும்.

2. ரயில் எண்.12682 கோயம்புத்தூர் - சென்னை சென்ட்ரல் வாராந்திர எக்ஸ்பிரஸ், 21ம் தேதி இரவு 11.30 மணிக்கு கோயம்புத்தூர் ஜங்சனில் இருந்து புறப்பட்டு, சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்குச் செல்லும்.

இவ்வாறு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe