அவினாசி அரசு உயர்நிலைப்பள்ளியை சீரமைக்க தீர்மானம்

published 2 years ago

அவினாசி அரசு உயர்நிலைப்பள்ளியை சீரமைக்க தீர்மானம்

 

கோவை: அவினாசி அரசு உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளை கூட்டம் அவினாசியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது. அறக்கட்டளை தலைவர் என். ஆர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு செயலாளர் சு நடராசன், பொருளாளர் செ.கணேஷ், துணைத்தலைவர் ப.சண்முகசுந்தரம், துணைச்செயலாளர் அ. தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் 10 செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 1960-ம் ஆண்டு முதல் 1977-ம் ஆண்டு வரை படித்த நூற்றுக்கு மேற்பட்டமுன்னாள் மாணவர்கள் பங்கேற்று தங்களது பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பள்ளியில் கலையரங்கம் அமைப்பது ,போட்டித் தேர்வுகளான நீட், அரசுப் பதவி நியமனத் தேர்வுகளான குரூப் 1, 2, 3, 4 வரை தயார் செய்வதற்கு தேவையான புத்தகங்களை திரட்டி ஒரு நூலகம் உருவாக்குவது.

வறுமையில் உள்ள ஏழை எளிய மாணவ மாணவியரின் உயர்கல்விக்கு உதவுதல், நெகிழி ஒழிப்பு, புகைபிடித்தலின் கேடு, மதுவை ஒழிக்க மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது. விளையாட்டில் சாதனை புரியும் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுக்கு தேவையான பொருட்கள், மற்றும் பயிற்சிகள் வழங்குவது. பசுமையை பாதுகாப்பது. மாணவர்கள் உயர்கல்வி, தொழில்கல்வி பெறுவதற்கு வழிகாட்டுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe