சிங்காநல்லூரில் தொழிலதிபர் வீட்டில் நகை கொள்ளை- திருடனின் கைரேகைகள் சிக்கியது…

published 8 months ago

சிங்காநல்லூரில்  தொழிலதிபர் வீட்டில்  நகை கொள்ளை- திருடனின் கைரேகைகள் சிக்கியது…

கோவை:கோவை அருகே உள்ள சிங்காநல்லூர் ,,உழவர் சந்தை பின்புறத்தில் பழைய ஹவுசிங் போர்டு காலனி உள்ளது.

இந்த காலனி வீடுகள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியதால் மோசமான நிலையில் உள்ளது. 
இதனால் அங்கு குடியிருந்த மக்கள் வேறு பகுதிகளுக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் அங்குள்ள ஒரு வீட்டில் சிங்காநல்லூரில் இன்டீரியர் டிசைனராக பணியாற்றும் கார்த்திக் (வயது 33) என்பவர் வாடகைக்கு வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் வீட்டை போட்டுவிட்டு வழக்கம்போல் கார்த்திக் அவரது மனைவியுடன் வேலைக்கு சென்று விட்டார்.

மீண்டும் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த கம்மல், பிரேஸ்லெட், வெள்ளி அரைஞாண் கயிறு, வளையல் உள்ளிட்ட நகைகள் திருடு போயிருந்தது.

மொத்தம் 5 பவுன் நகைகள் திருடப்பட்டு இருந்தது இதன் மதிப்பு ஒரு 2 லட்சம் ஆகும்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கார்த்தி சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் யூசுப் , ஆறுமுகம்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

கைரேகை நிபுணர்களும் சென்று திருடனின் கைரேகைகள் சிக்கி உள்ளதா என ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளை நடந்த இடத்தில் திருடனின் கைரேகைகள் கண்டுபிடிக்கப்பட்டது. 
இதன் மூலம் இந்த கொள்ளை சம்பவத்தில் பழைய குற்றவாளி தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe