கோவையில் இந்த இரண்டு நிறுவனங்களில் பணத்தை இழந்தவர்களா நீங்கள்- உங்கள் பணத்தை பெற்று கொள்ள வழி...

published 8 months ago

கோவையில் இந்த இரண்டு நிறுவனங்களில் பணத்தை இழந்தவர்களா நீங்கள்- உங்கள் பணத்தை பெற்று கொள்ள வழி...

கோவை: கோயம்புத்தூர், டாடாபாத், டாக்டர். இராஜேந்திர பிரசாத் சாலை (நூறடி சாலை), கதவு எண் 226 என்ற முகவரியில் செயல்பட்டு வந்த தி/வா.ஸ்ரீநிவாசப் பெருமாள் பைனான்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் தி/வா.சுந்தரம் பைனான்ஸ் குழுமம் ஆகிய நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து பல்வேறு முதலீட்டுத் திட்டங்களின் பேரில் பெற்றுக்கொண்டு பணத்தை திரும்ப வழங்காமல் மேற்படி நிதி நிறுவனங்களை மூடிவிட்டது தொடர்பாகப் பொதுமக்களிடமிருந்து புகார்கள் பெறப்பட்டன.

இப்புகார்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து பல்வேறு அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் மேற்காண்ட நிதி நிறுவனங்களின் சொத்துக்கள் கையகப்படுத்தப்பட்டு, விற்பனை செய்து அத்தொகை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு, தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்புச் சட்டம், 1997 -இன் படி திரும்ப வழங்கப்பட்டு வருகிறது. 

மேற்படி நிறுவனங்களில் முதலீடு செய்து இன்னும் பணத்தை திரும்பப் பெறாமல் உள்ளவர்கள் உடனடியாக தங்கள் கைவசம் உள்ள சான்றுகளுடன் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் உள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தையோ அல்லது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகப் புதிய கட்டடத்தில் முதல் மாடியில் உள்ள டான்பிட் பிரிவையோ (அறை எண் 22) அணுகுமாறு தெரிவிக்கப்படுகிறது.

21.07.2024 ஆம் தேதிக்குள் மேற்கண்ட அலுவலகங்களை அணுகி தங்களது முதலீட்டுத் தொகையை பாதிக்கப்பட்டோர் திரும்பப்
பெற்றுக்கொள்ளலாம்.
மேற்கண்ட தேதிக்குப் பின்னர் அரசு வசம் உள்ள இருப்புத்தொகையானது நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளதால் இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe