கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 500-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு...

published 7 months ago

கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 500-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு...

கோவை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசை கண்டித்தும் தமிழ்நாடு காவல்துறையை கண்டித்தும் நேற்றைய தினம் கோவை மாவட்ட  பாஜகவினர் சித்தாபுதூர் வி.கே.கே மேனன் சாலையில் உள்ள பாஜக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

இந்த ஆர்ப்பாட்டமானது பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏபி முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற நிலையில் காவல்துறையின் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக காட்டூர்  காவல்துறையினர் சுமார் 500க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் உயிரிழந்தவர்கள் போன்று வேடம் அணிந்தும் பாடை கட்டியும் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட இருந்தது. கைது செய்யப்பட்டவர்கள் தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்ட நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று அவர்களை நேரில் சந்தித்து பேசினார். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் இரவு பத்து மணிக்கு விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் காவல்துறை அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ பி முருகானந்தம், பாஜக துணை தலைவர் கனகசபாபதி, கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் உட்பட 496 பேர் மீது அனுமதியின்றி ஒன்று கூடுதல், முறையற்ற தடுப்பு ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் காட்டூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே போல் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், மக்களுக்கு தொல்லை கொடுத்தல், சட்டவிரோதமாக கூடுதல், முறையற்ற தடுப்பு, ஆபாச செய்கையில் ஈடுபடுதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் பாஜக முன்னாள் கவுன்சிலர் ஏ
டி.ராஜன் உட்பட 18 பேர் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe