கோவை அருகே குடியிருப்பு வாசிகளை துரத்திய காட்டுயானை- திக் திக் சிசிடிவி காட்சிகள் உள்ளே...

published 7 months ago

கோவை அருகே குடியிருப்பு வாசிகளை துரத்திய காட்டுயானை- திக் திக் சிசிடிவி காட்சிகள் உள்ளே...

கோவை: கோவை மருதமலை ஒட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுமார் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் அவ்வப்போது ஊருக்குள் புகுகின்றன. பின்னர் வனத்துறையினருக்கு தகவல் அளித்து அங்கு வரும் வனத்துறையினர் யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டுவதும் வழக்கமாகி வருகிறது. 

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு மருதமலை ஐ.ஓ.பி அருகே உள்ள குடியிருப்பில் ஒரு தம்பதியர் வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த ஆண் காட்டு யானை ஒன்று அவர்களை வீட்டின் கேட் வரை விரட்டிய நிலையில் அச்சமடைந்த இருவரும் பதறி அடித்துக் கொண்டு வீட்டுக்குள் ஓடினர். 

இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி, வைரலாகி வருகிறது.

சிசிடிவி காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/jncKJdSMm9s

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe