Zoho வேலைவாய்ப்பு: டெக்னிக்கல் சப்போர்ட் இன்ஜினியர் பணி... உடனே விண்ணப்பிங்க!

published 7 months ago

Zoho வேலைவாய்ப்பு: டெக்னிக்கல் சப்போர்ட் இன்ஜினியர் பணி...  உடனே விண்ணப்பிங்க!

பிரபல ஜோஹோ (ZOHO) ஐ.டி நிறுவனத்தில் டெக்னிக்கல் சப்போர்ட் இன்ஜினியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தை மையமாகக் கொண்டு செயல்படும் ZOHO நிறுவனம் சென்னை, மதுரை, நெல்லை, சேலம், கோவை உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது.

தற்போது ஜோஹோ நிறுவனத்தில் டெக்னிக்கல் சப்போர்ட் இன்ஜினியர் (Technical Support Engineer)  பணியிடங்களை நிரப்புவதற்கான  அறிவிப்பு வெளியாகியுள்ளது.  சென்னை, சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் மதுரையில் இந்தப் பணிக்கான காலியிடங்கள் உள்ளன

ஆங்கிலத்தில் சரளமாக பேசவும்,  எழுதவும் தெரிய வேண்டும். பணிக்கான தகுதி மற்றும் அனுபவம் பற்றி அறிவிப்பில் படித்து தெரிந்து கொள்ளவும்.

இந்தப் பணியிடங்களுக்கான சம்பள விபரம்  கொடுக்கப்படவில்லை. கல்வித் தகுதி, முந்தைய பணி அனுபவம் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.  மேலும் எத்தனை இடங்கள் நிரப்பப்பட உள்ளன, விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகியவை குறிப்பிடப்படவில்லை. தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://careers.zohocorp.com/jobs/Careers/2803000614929125/Technical-Support-Engineers?source=CareerSite என்ற இணைய தள பக்கத்தை பார்க்கவும். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe