SSC CGL 2024: மத்திய அரசில் பல்வேறு துறையில் வேலை... 17, 727 பணியிடங்கள் அறிவிப்பு!

published 7 months ago

SSC CGL 2024: மத்திய அரசில்  பல்வேறு துறையில் வேலை... 17, 727  பணியிடங்கள் அறிவிப்பு!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இருக்கும் குரூப் பி மற்றும் சி பிரிவில் (SSC CGL) உள்ள  காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம்  நாடு முழுவதும் உள்ள 17,727 பணியிடங்கள்  நிரப்பப்படவுள்ளது என அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். முழுமையான கல்வி தகுதியை அறிந்து கொள்ள அறிவிப்பை படித்துப் பார்க்கவும்.

வயது வரம்பு

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தது 18 வயது நிரம்பியவர்களாக  இருக்க வேண்டும்.  அதிகபட்சமாக 27 - 30 வயது வரை இருக்க வேண்டும்.  

தேர்வு  

Tier 1 & Tier 2 என இரண்டு நிலை தேர்வின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  

எப்படி விண்ணப்பிப்பது?

https://ssc.gov.in/ என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புபவர்கள்  இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பிக்க கடைசி நாள் 24.07.2024 ஆகும்.

மேலும் தகவல்

SSC CGL பணிக்கான தேர்வு தேதிகள் மற்றும் முழு விவரங்களை  படிக்க லிங்கில் உள்ள அறிவிப்பை  படித்துப் பார்க்கவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe