சூலூர் அருகே கோர விபத்து; பேருந்தை முந்த முயன்ற கார் பல்டி அடித்தது... வீடியோ உள்ளே!

published 7 months ago

சூலூர் அருகே கோர விபத்து; பேருந்தை முந்த முயன்ற கார் பல்டி அடித்தது... வீடியோ உள்ளே!

கோவை: கோவையில் பேருந்தை முந்த முயன்ற போது தலைகுப்புற கவிழ்ந்த காரின் சினிமாவை மிஞ்சும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கோவை மாவட்டம் பல்லடம் அருகில் காரணம்பேட்டையில் இருந்து சூலூர் நோக்கி வேகமாக வந்துகொண்டு இருந்த தனியார் பேருந்தை பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று முந்தி செல்ல முயன்றது.

ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் முந்தி சென்ற காரின் மீது தனியார்பேருந்து உறசியதில் கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்து தனியார் பேருந்தில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த வீடியோக்கள் தற்பொழுது வெளியாகி பார்போரை அச்சமடைய செய்துள்ளது.

மேலும் இந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. காரில் பயணம் செய்த நால்வரில் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயம் ஏற்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/oqfDefMmpT0

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe