தொழில் முனைவோருக்கு வேளாண் பல்கலையில் பயிற்சி!

published 7 months ago

தொழில் முனைவோருக்கு வேளாண் பல்கலையில் பயிற்சி!

கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின்கீ ழ் செயல்படும் விதை மையத்தில் தொழில் முனைவோருக்கான தரமான விதை உற்பத்தி தொழில்நுட்பப் பயிற்சியானது விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) திட்டத்தின்கீழ் நடத்தப்பட்டது.

 

இப்பயிற்சியின் துவக்க உரையில் விதை மைய இயக்குநர் முனைவர் உமாராணி, கலந்து கொண்டு பேசுகையில் தரமான விதைகளின் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடு ஆகிவற்றைப்பற்றி விரிவாக எடுத்துரைத்தார். 

மேலும், விவசாயப் பெருமக்கள் விதை உற்பத்தி செய்து தரமான விதைகளை மற்ற விவசாயிகளுக்கு வழங்கிட முன்வர வேண்டும் என்றும் உரைத்தார். வேளாண் வணிக மேம்பாட்டு இயக்கக இயக்குநர் முனைவர் ஏ.சோமசுந்தரம் அவர்கள் விதை உற்பத்தி மூலம் கிடைக்கும் அதிக வருவாய் மற்றும் விதை வணிகம் பற்றிய விபரங்களை தனது சிறப்புரையில் எடுத்துரைத்தார்.

அங்கக முறையில் உற்பத்தி செய்யப்படும் விதைகளுக்கு அதிகளவு தேவை உள்ளது எனவும் அதனால் விவசாயிகள் பெருமளவில் விதை உற்பத்தி செய்ய முன்வர வேண்டும் என்றும் வேண்டினார்.

நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் திருமலா ராவ் அவர்கள் வங்கியின் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்குரிய பல்வேறு திட்டங்களைப் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார். மேலும், விவசாயிகள் மற்றும் மகளிர் நபார்டு வங்கியின் திட்டங்களை செயல்படுத்தி கிராமப்புற வளர்ச்சிக்கு உதவிடுமாறு கேட்டுக்கொண்டார்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்பயிற்சியில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்த விளக்கங்களும், செயல் விளக்கங்களும்
விஞ்ஞானிகளால் எடுத்துரைக்கப்பட்டன.

விவசாயிகள் விதை உற்பத்தி வயல்களையும், சுத்திகரிப்பு நிலையத்தையும் பார்வையிட்டனர். பல்வேறு தொழில்நுட்பங்கள் அடங்கிய பயிற்சிக் கையேடும் விவசாயிகளுக்கு பயிற்சியின்போது வழங்கப்பபட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe