கோவையில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் நடைபெறும் தேதி அறிவிப்பு...

published 7 months ago

கோவையில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் நடைபெறும் தேதி அறிவிப்பு...

கோவை: வைட்டமின் "ஏ" என்ற உயிர்சத்து உடலுக்கு இன்றியமையாத ஒரு ஊட்டச்சத்து. இச்சத்து ஆரோக்கியமான கண் பார்வைக்கு முக்கிய பங்களிக்கிறது. இது மட்டுமில்லலாமல் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திக்கும். தோல், திசு மற்றும் எலும்பு வளர்ச்சிக்கும் தேவையான ஊட்டச்சத்தாகும். 

இச்சத்து குறைபாட்டினால் வறண்ட விழித்திரை, விழிவெண் திரையில் முக்கோண வடிவத்தில் வெண்ணிறமாக தடித்தல் (Bitot's spot) மற்றும் மாலைக்கண் நோய் போன்றவைகள் ஏற்படும். இவற்றிற்கு தக்க சிகிச்சையளிக்கப்படவில்லை என்றால் பார்வை இழக்க நேரிடும்.

இதனை கருத்தில் கொண்டு தேசிய அளவில் வருடம் இருமுறை வைட்டமின் "ஏ" திரவம் நாடு முழுவதும் உள்ள 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு இம்முகமானது 01.07.24 முதல் 31.07.23 (புதன் மற்றும் ஞாயிறு நீங்கலாக) வரை தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதர நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இம்முகாம்களில் பொது சுகாதாரதுறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டம் துறைகளைச் சார்ந்த களப்பணியாளர்கள் இணைத்து பணியாற்ற உள்ளார்கள்.

இம்முகாமின் மூலம் நம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 2,72,024 குழந்தைகளுக்கு வைட்டமின் "ஏ" திரவம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் அனைவரும் தங்களுடைய 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் "ஏ" திரவத்தினை அளித்து கண் பார்வை குறைபாடில்லாத இளைய சமுதாயத்தினரை உருவாக்கிட ஒத்துழைப்பு
நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe