கோவையில் காரை திருடி, பெயிண்ட் நிறத்தை மாற்றி விற்பனை செய்த கும்பல்!

published 7 months ago

கோவையில் காரை திருடி, பெயிண்ட் நிறத்தை மாற்றி விற்பனை செய்த கும்பல்!

கோவை: கோவை, செல்வபுரம் பகுதியில் ஒரு எஸ்யூவி (தார்) மற்றும் இரண்டு கார்களைத் திருடிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த முகமது அத்னன், நவாஸ் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் மூன்று கார்களில் கடந்த மார்ச் 16- ம் தேதி கோவை குற்றாலம் வந்து உள்ளனர். பிறகு கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள மசூதிக்கு அருகில் தங்களது கார்களை நிறுத்தி விட்டு தொழுகைக்கு சென்றனர். 

தொழுகை முடிந்து வெளியே வந்து பார்க்கும் போது மூன்று கார்களும் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் கோவை கரும்புகடை ஆப்பிள் தோட்டத்தை சேர்ந்த எச்.அசாருதீன் 29, திப்பு நகர் முதல் தெருவை சேர்ந்த எஸ்.முகமது யாசிர் 28, முகமது யூசுப் 28, மற்றும் துடியலூர் அருகே உள்ள கவுண்டர் மில்ஸை சேர்ந்த பி.ஜான் சுந்தர் 50, எனபது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சிவப்பு நிற எஸ்யூவியை கருப்பு நிறத்தில் மாற்றி கோவை கரும்புக் கடையைச் சேர்ந்த ஒருவருக்கு ரூ.1.5 லட்சத்துக்கு விற்று உள்ளனர். 
 

அவர்களிடம் இருந்து திருடப்பட்ட மூன்று வாகனங்களையும் போலீசார் மீட்டனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இது குறித்து வேறு வாகனங்கள் திருடப்பட்டு உள்ளதா ? அல்லது வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாநகரில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தொடர் திருடப்பட்ட சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் கார் கடத்தலில் ஈடுபட்ட நான்கு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து உள்ளது திருடர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe