ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் தாய்ப்பால் தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி

published 2 years ago

ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் தாய்ப்பால் தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி

கோவை: ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் கோவையில் தாய்ப்பால் தானம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்கத்தான்  பேரணி நடைபெற்றது.

தாய்ப்பால் தானம் என்பது குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அல்லது பிரசவத்தின் போது ஏற்படும் மன உலைச்சலினால் தாய்க்கு பால் இல்லாமல் போவதினால் அச்சமயத்தில் தாய் பால் தானம் என்பது மிகவும் அவசியமாக ஒன்றாக உள்ளது.

இந்நிலையில் இந்த தாய்ப்பால் தானம் மற்றும் தாய்ப்பால் புகட்டுவதன் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் வாக்கத்தான் பேரணி நடைபெற்றது. ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இந்த வாக்கத்தான் நிகழ்ச்சியைக் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் பலூன்களை பறக்கவிட்டு, கொடி அசைத்துத் துவக்கி வைத்தார்.

மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்ட இந்த வாக்கத்தான் பேரணியில், கற்பிப்போம் கை கொடுப்போம் தாய்ப்பால் கொடுக்கும் கலாச்சாரத்தைக் காப்போம், தாய்ப்பால் குடிப்பது குழந்தையின் உரிமை அதற்குத் துணை நிற்பது நமது கடமை, தாய்ப்பால் தாயின் பணி மட்டும் இல்லை சமுதாயத்தின் கடமை, என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியபடி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe