கலங்கல் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க கூடாது- கண்களை கட்டி கொண்டு நூதன முறையில் கோரிக்கை...

published 7 months ago

கலங்கல் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க கூடாது- கண்களை கட்டி கொண்டு நூதன முறையில் கோரிக்கை...

கோவை: கோவை சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலங்கல் ஊராட்சியை நகராட்சியோடு இணைக்ககூடாது என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கண்களை கருப்பு துணியால் கட்டியபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மனு அளித்தனர்.

அவர்களை தடுத்து நிறுத்திய காவலர்கள் கருப்பு துணிகள் அகற்றிய பின்னர் மனு அளிக்க அனுமதிக்கபட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் சுமார் 10,000 பேர் கலங்கல் ஊராட்சி பகுதியில் வசித்து வருவதாகவும் இதில் 650க்கும் மேற்பட்டோர் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றி வருவதாக தெரிவித்தனர்.மேலும் மத்திய அரசின் நிதி குழு மூலமாக ஊராட்சியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதாகவும் வீட்டு வரி சதுர அடிக்கு 1ரூபாய் 10 பைசா வசூலிக்கப்படுவதாக தெரிவித்தனர்.ஊராட்சி நகராட்சியாக மாற்றம் செய்தால் 650 குடும்பங்களில் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும் எனவும் பல மடங்கு வரி அதிகரிக்கபடும் என தெரிவித்தனர். 

பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் ஏராளமானோர் இங்கு வசித்து வருவதால் மக்களின் உணர்விற்கு மதிப்பளித்து கலங்கல் ஊராட்சியை நகராட்சியாக மாற்றம் செய்யக் கூடாது என வலியுறுத்தினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe