காட்-பி யில் வெற்றி பெற்ற பி.டெக் மாணவர்களுக்கு பாராட்டு...

published 7 months ago

காட்-பி யில் வெற்றி பெற்ற பி.டெக் மாணவர்களுக்கு பாராட்டு...

கோவை: கிராஜீவேட் ஆப்டிட்யூட் டெஸ்ட் பயோடெக்னாலஜி காட்-பி 2024 ஆனது 2024-25 ஆம் கல்வியாண்டில் பயோடெக்னாலஜியில் டிபிடி-ஆதரவு முதுகலை (டிபிடி பிஜி) திட்டங்களுக்கான சேர்க்கைக்காக ஏப்ரல் 2024 இல் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்டது. 

இந்த திட்டத்தில் சேர்க்கைக்காக இந்தியா முழுவதும் 127 நகரங்களில் கணினி அடிப்படையிலான தேர்வு நடத்தப்பட்டது. த.வே.ப.க பயோடெக்னாலஜியில் பங்கேற்ற மாணவர்களில் ஒன்பது பேர் காட்-பி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். த.வே.ப.க மாணவர்களில் திரு. யோகராஜ் (150) அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும் மாணவர்கள் அர்ச்சிதா (142), ரிதன்யா (133), கீர்த்திவாசன் (131), தினேஷ் (130), பபீனா (128), அஜித் (115), அருள்யாழினி (111.5) மற்றும் ராஜாராம் (105.5), தேர்ச்சி பெற்றுள்ளனர்.

காட்-பி 2024 இன் தகுதியான விண்ணப்பதாரர்கள் பயோடெக்னாலஜி மற்றும் அது சார்ந்த அறிவியலில் டிபிடி ஆதரவு பெற்ற முதுகலை (டிபிடி Hஜி) திட்டங்களுக்கு அனுமதிக்கபடுகிறார்கள்.

ஒன்பது மாணவர்களில் ஐந்து பேர், யோகராஜ் (150), அர்ச்சிதா (142) ரிதன்யா(133), அஜித் (115), ராஜாராம் (105.5) ஆகியோர் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் கடல் உயிரித் தொழில்நுட்பத் திட்டத்தில் எம்.டெக் படிப்பிற்கான இடத்தைப் பெற்றறுள்ளனர் மற்றும் அவர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ. 12,000/- வழங்கப்படும். 
ஒன்பது மாணவர்களும் மும்பையின் இன்ஸ்டியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி வழங்கிய தகுதிப் பட்டியலில் உள்ளனர். அவர்களின் கலந்தாய்வு விரைவில் நடைபெறும்.

காட்-பி தேர்வில் சிறப்பாக செயல்பட்ட பயோடெக்னாலஜி மாணவர்களை த.வே.ப.க துணைவேந்தர் முனைவர் கீதாலட்சுமி பாராட்டினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe