கோவை மாவட்ட பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் அறிவிப்பு- மாவட்ட ஆட்சியர் தகவல்...

published 7 months ago

கோவை மாவட்ட பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் அறிவிப்பு- மாவட்ட ஆட்சியர் தகவல்...

கோவை: அண்ணல் காந்தியடிகள், சவகர்லால்நேரு, அண்ணல் அம்பேத்கர் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் கருத்துகளையும் சமூக சிந்தனைகளையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வண்ணம் அவர்களின் பிறந்தநாள்களினை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறையால் மாவட்ட அளவில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப்போட்டிகள் நடத்திப் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப் பெற்றுவருகின்றன.  

அவ்வறிவிப்பின் படி 2024ஆம் ஆண்டு சூன் 3ஆம் நாள் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழாத் தொடர்பில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு 11.07.2024 வியாழக்கிழமை அன்று கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரகத்தின் பழைய கட்டடத்தின் இரண்டாம் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளன.

அப்போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெறும் பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முறையே முதல்பரிசு ரூ.5000/ இரண்டாம்பரிசு ரூ.3000 மூன்றாம்பரிசு ரூ.2000- என்ற வகையில் வழங்கப்பெற உள்ளது.
மேலும், பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப்போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களுள் அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டுபேரைத் தனியாகத் தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத்தொகை ரூ.2000- வீதம் வழங்கப்பெறவும் உள்ளன.

பள்ளித் தலைமையாசிரியர்கள் அவர்தம் பள்ளி மாணவர்களிடையே
முதற்கட்டமாக முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ்மன்றம் வாயிலாக முதல் சுற்று பேச்சுப்போட்டிகள் நடத்தி மாணவர்களைத் தேர்வு செய்து மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க முதன்மைக் கல்வி அலுவலர் வழியாகவும் கல்லூரிப் போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்களின் பெயர்ப்பட்டியல் கல்லூரிகளின் முதல்வர்கள் வழியாகவும் பின்வரும் முகவரியில் நேரில் / அஞ்சலில்
அல்லது [email protected] என்ற மின்னஞ்சலில் 10.07.2024ஆம் நாளுக்குள்
அனுப்பி வைக்கவேண்டும்.

முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள்விழாப் பேச்சுப்போட்டியின்
தலைப்புகள்;

பள்ளி மாணவர்களுக்கானத் தலைப்புகள்

செம்மொழிக் காவலர்

கலைஞரும் தமிழும்

வரலாற்று நாயகர்

கல்லூரி மாணவர்களுக்கானத் தலைப்புகள்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.

பல்கலை வித்தகர்.

சட்டமன்ற நாயகர்.

பள்ளிப்போட்டி காலை 9.30 மணிக்கும் கல்லூரிப்போட்டி பிற்பகல்  02.30
மணிக்கும் தொடங்கப்பெறும். இப்போட்டிகளில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள
பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு
மாவட்ட ஆட்சியர்  கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe