கோவையில் நடைபெற்ற படைவீரர் குறைகேட்பு கூட்டம்...

published 7 months ago

கோவையில் நடைபெற்ற படைவீரர் குறைகேட்பு கூட்டம்...

கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், தற்போது படையில் பணிபுரிவோர் மற்றும் அவரைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் மாவட்டஆட்சித் தலைவர்  அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலுள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், தற்போது படையில் பணிபுரிவோர் மற்றும் அவரைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் மாவட்டஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உதவி இயக்குநர் முன்னாள் படைவீரர் நலன்) மேஜர் ரூபா சுப்புலெட்சுமி, மாவட்ட முப்படை வீரர் வாரிய உபதலைவர் கேப்டன் ஸ்ரீகணேஷ் ராஜ்(ஓய்வு) மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர், தற்போது படையில் பணிபுரிவோர் மற்றும் படைவீரர் குடும்பத்தினர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, பட்டாமாறுதல், இலவச வீடு சிறப்பு நிதியுதவி, குடிநீர் இணைப்பு, வேலைவாய்ப்பு கடனுதவி, உள்ளிட்ட 27 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் வழங்கினர்.

பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, தகுதியான மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe