கோவை எம்பி க்கு சொந்தமான கட்டிடத்தில் டாஸ்மாக்- சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்...

published 7 months ago

கோவை எம்பி க்கு சொந்தமான கட்டிடத்தில் டாஸ்மாக்-  சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்...

கோவை: கோவை கணபதி பகுதியில் இருந்து சங்கனூர் செல்லும் சாலையில்  கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமாருக்கு சொந்தமான கட்டிடம் இயங்கி வருகிறது. அந்த கட்டிடத்தில் டாஸ்மார்க் (கடை எண்1638) கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் அந்த டாஸ்மாக் கடைக்கு அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு கட்டங்களாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் அதற்கு எந்த வித தீர்வும் கிடைக்காத காரணத்தினால் இன்று திடீரென அந்த கடை முன்பு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனை தொடர்ந்து இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது உரிய அதிகாரிகளிடம் மனு அளித்து இதற்கு தீர்வு காண வேண்டும் இவ்வாறு சாலை மறியலில் ஈடுபடக்கூடாது என்று எடுத்து கூறினார். அதனைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்று இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்தனர்.

அதன்படி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe