போலீசுக்கு இது சவால் - கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேட்டி!

published 7 months ago

போலீசுக்கு இது சவால் - கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேட்டி!

கோவை: சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவது காவல்துறைக்கு தொழில் நுட்ப ரீதியாக ஒரு சவால்தான் என்று கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவையில் காவலர்களுக்கான விரிவான மருத்துவ முகாம் அவினாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

ஸ்வர்கா பவுண்டேஷன் சார்பாக நடைபெற்ற முகாமை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

இதில், ஆயுர்வேதம், உட்சுரப்பியல், பிசியோதெரபி, பெண்கள் மருத்துவம், நுரையீரல் பரிசோதனை, பல் மற்றும் கண் பரிசோதனை என விரிவான மருத்துவ முகமாக நடைபெற்றது.

இந்த முகாமை துவக்கி வைத்த பின் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காவலர்களின் உடல் நல ஆரோக்கியம் காக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு முகாம்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த முகாம் நடைபெறுகிறது.

மேலும் காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களுக்கு வரும் மாற்றுத்திறனாளி பொதுமக்களுக்கென பிரத்யேக வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்பட உள்ளன.

குறிப்பாக சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவது காவல்துறைக்கு தொழில் நுட்ப ரீதியாக  ஒரு சவால் தான். சைபர் குற்றங்கள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தபட்டு வருகின்றன.

அதையும் தாண்டி சிலர் ஏமாந்து விடுகின்றனர். இது போன்ற வழக்குகளில் தனி குழுவினர் விசாரனை செய்து விரைவில் குற்றவாளிகளை கைது செய்கின்றனர். என்றார்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe