காவலர் குழந்தைகளுக்கு காப்பகம் : காவல் ஆணையர் துவக்கி வைத்தார்

published 2 years ago

காவலர் குழந்தைகளுக்கு காப்பகம் : காவல் ஆணையர் துவக்கி வைத்தார்

 

கோவை மாநகர காவல் ஆணையராக பாலகிருஷ்ணன் பொறுப்பேற்றது முதல் பல்வேறு புதிய திட்டங்களை  அமல்படுத்தி வருகிறார். போலீசாரின் மன அழுத்தங்களை குறைக்கும் வகையில் அவ்வப்போது போலீசார் குடும்பத்தினருக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தினார்.

இந்த நிலையில், பணிக்கு செல்லும் காவலர்களின் குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ள காப்பகம், மனமகிழ் மன்றம் மற்றும் நூலகம் ஆகியவற்றை திறக்க திட்டமிட்டு இருந்தார்.

அதன்படி, கோவை மாநகர காவல் ஆணையர் பலகிருஷ்ணன் இன்று காலை கோவை மாநகர காவல் ஆயுதப்படை வளாகத்தில் காவலர் குழந்தைகள் காப்பகம், நூலகம் மற்றும் காவலர் மன மகிழ் மன்றம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

தொடர்ந்து குழந்தைகள் காப்பகத்திற்கு சென்று அங்கிருந்த குழந்தைகளுடன் உரையாடினார். பின்னர் போலீசாருடன் மன மகிழ் மன்றத்தில் கேரம் போர்டு விளையாடினார்.

தொடர்ந்து புதிய நூலகத்தில் உள்ள புத்தகங்களை பார்வையிட்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe