தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் 3 தங்க பதக்கங்களை வென்று அசத்திய கோவையை சேர்ந்த டாஸ்மாக் ஊழியர்...

published 7 months ago

தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் 3 தங்க பதக்கங்களை வென்று அசத்திய கோவையை சேர்ந்த டாஸ்மாக் ஊழியர்...

கோவை: கோவை மாவட்டம் ஈச்சனாரி பகுதியில் வசிப்பவர் ஈஸ்வரன். இவர் டாஸ்மாக் கடையில் சேல்ஸ் மேனாக பணிபுரிந்து வருகிறார். 

விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர் பழு தூக்கும் பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறார். பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று வரும் இவர் சமீபத்தில் ராஜஸ்தானின் நடைபெற்ற தேசிய அளவிலான பழு தூக்கும் போட்டியில் தமிழ்நாடு அணி சார்பாக போட்டியிட்டார்.

தான் போட்டியிட்ட மூன்று பிரிவுகளிலும் முதலிடம் பிடித்து மூன்று தங்க பதக்கங்களை வென்றார். மாஸ்டர் பிரிவில் நடந்த பழு தூக்கும் போட்டியில் 455 கிலோ எடையை தூக்கி உள்ளார். பெஞ்ச் பிரஸ் பிரிவில் 105 எடை தூக்கி உள்ளார். டெட் லிஃப்ட் பிரிவில் 200 கிலோ எடை தூக்கி உள்ளார். மூன்று பிரிவுகளிலும் அதிக எடையை தூக்கியதனால் ஸ்ட்ராங் மேன் என்ற பட்டமும் வென்றார்.

தற்போது நண்பர்கள் உதவியுடன் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ளும் இவர், அரசாங்கமும் தன்னார்வலர்களும் உதவி புரிந்தால்  தான் மேலும் உயர கூடும் என கூறினார். பல்வேறு பணிகள் குடும்ப சூழல் மத்தியிலும் தேசிய அளவில் சாதனை புரிந்த இவர் சர்வதேச அளவிலான போட்டிக்கு தன்னை தயார் படுத்தி வருகிறார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe