நாளை வெளியாகும் இந்தியன் 2... சிறப்பு காட்சிக்கு அனுமதி!

published 7 months ago

நாளை வெளியாகும் இந்தியன் 2... சிறப்பு காட்சிக்கு அனுமதி!

கமல் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிகளை திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996-ம் ஆண்டு வெளியானது இந்தியன் படம். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். 28 ஆண்டுகள் கழித்து தற்போது இந்தியன் படத்தின் 2ம் பாகம்  உருவாகி உள்ளது.

Exclusive: Kamal Haasan starrer Indian 2 first single to drop on THIS date  | PINKVILLA

ஷங்கர் இயக்கத்தில், கமல் ஹாசன் நடிப்பில், உருவாகி உள்ள இந்தப் படம்  நாளை  வெளியாகிறது.
லைகா நிறுவனம் தயாரிப்பில், பிரியா பவானி சங்கர், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தியன் 2 படத்துக்கு U/A சான்று... சென்சார் போர்டு போட்ட 5 கண்டிஷன்!

இந்தியன் 2 படத்தின்  சிறப்புக் காட்சிக்கு அனுமதி கோரி  லைகா நிறுவனம் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கை தற்போது ஏற்கப்பட்டுள்ளது.  

அதன்படி இந்தியன் 2 திரைப்படத்துக்கு நாளை ஒரு நாள் (12.07.2024) சிறப்புக் காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.  நாளை ஒரு நாள் மட்டும், 5 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல், மறுநாள் 13ம் தேதி அதிகாலை 2 மணி வரை ஐந்து காட்சிகள் திரையிட முடியும்.  

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe