ராஜவீதியில் நகை வாங்க வருவது போல் நகையை திருடிய நபர்- சிசிடிவி காட்சிகள் வெளியீடு...

published 7 months ago

ராஜவீதியில் நகை வாங்க வருவது போல் நகையை திருடிய நபர்- சிசிடிவி காட்சிகள் வெளியீடு...

கோவை: கோவை ராஜவீதியில் உள்ள நகை கடையில் நகை வாங்குவது போல் முதியவரை நாடகமாடி திசை திருப்பி 5 சவரன் நகையை மர்ம நபர் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ராஜவீதி பகுதியைச் சேர்ந்த விஷ்ணு என்பவர் ஆர் வி நகைக்கடை என்ற பெயரில் ராஜவீதி மற்றும் பெரிய கடை வீதியில் நகைக்கடைகள் நடத்தி வருகிறார். இந்நிலையில் ராஜவீதியில் உள்ள கடைக்கு நேற்று காலை வந்த மர்ம நபர் பத்து சவரன் சங்கிலி கேட்டுள்ளார். டிசைன்களைப் பார்த்த அந்த நபர் திடீரென ஒரு தங்க சங்கிலியை மட்டும் கீழே போட்டு, அனைவரும் இருந்ததால் அதை எடுத்துக் கொடுத்துள்ளார். 

பிறகு டிசைன் சரியில்லை என மற்ற கடைகளுக்கு சென்ற அந்த நபர் நேற்று மாலை நகை கடை உரிமையாளர் விஷ்ணு வீட்டுக்கு மதிய உணவுக்கு சென்றபின் வந்துள்ளார். அப்போது கடையில் விஷ்ணுவின் தந்தை இருந்த நிலையில் தான் காலையில் பார்த்துவிட்டுசென்ற அதே தங்க சங்கிலி வேண்டும் எனவும் மற்ற கடைகளில் அது போன்ற டிசைன் கிடைக்கவில்லை எனவும் கூறியுள்ளார். இதனை நம்பிய விஷ்ணுவின் தந்தை தங்களது அந்த நகையை எடுப்பதற்கு நகர்ந்துள்ளார். நானும் சொல்லும்போது உனக்கு விஷ்ணுவின் தந்தை நகர்ந்ததும் கண நேரத்தில் கடையில் வைத்திருந்த, ஐந்து சவரன் தங்க சங்கிலியை திருடிவிட்டு நகை வேண்டாம் என கூறிவிட்டு தப்பினார். 

சந்தேகம் அடைந்த விஷ்ணுவின் தந்தை நகைகளை சரிபார்த்தபோது 83 கிராம் கொண்ட தங்க சங்கிலி மாயமானது தெரியவந்தது இதனால் அதிர்ச்சி அடைந்த விஷ்ணுவின் தந்தை தனது மகனுக்கு தெரிவித்த தொடர்ந்து கடைக்கு வந்த விஷ்ணு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து இது தொடர்பாக பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி இருக்கின்றனர் இதனிடையே கடையில் முதியவரின் கவனத்தை திசை திருப்பி ஐந்து சவரன் தங்க சங்கிலியை மர்ம நபர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன..

மேலும் பல்வேறு கடைகளில் திருடன் முயன்ற அந்த நபர் குடிபோதையில் இருந்ததாகவும், அதன் காரணமாக மாஸ்க் அணிந்திருந்ததாகவும் நகை கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/UUy1PoKni6o

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe