அஷ்ட கோணாசனத்தில் உலக சாதனை புரிந்த கோவை மாணவன்...

published 7 months ago

அஷ்ட கோணாசனத்தில் உலக சாதனை புரிந்த கோவை மாணவன்...

கோவை: கோவை வேலம்மாள் போதி கேம்பஸ்  பள்ளியில் பயிலும் சிறுவன் சர்வஜித் நாராயணன்  15 அடி உயர டவரில் மீது   அஷ்ட கோணாசனத்தில் ஏழு நிமிடங்கள்  இருபது விநாடிகள்  தொடர்ந்து  நின்றபடி   உலக சாதனை செய்து அசத்தியுள்ளார்.

 

கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த சரண்யா,பாலசுந்தரம் தம்பதியினரின் மகன் சர்வஜித் நாராயணன்.12 வயதான இவர் வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள வேலம்மாள் போதி கேம்பஸ்  பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார்.
சிறு வயது முதலே  யோகாவில் இரண்டு  கின்னஸ் சாதனை உட்பட வீடு முழுவதும் கோப்பைகள், விருதுகள்,சான்றிதழ்கள் குவித்து வைத்துள்ள சிறுவன்,சர்வஜித் தற்போது 15 அடி உயரத்தில் யோகாவில்  புதிய  உலக சாதனை செய்துள்ளார்.

சிறுவன் சர்வஜித் பயிலும் வேலம்மாள் போதி கேம்பஸில்  நடைபெற்ற உலக சாதனை நிகழ்வில், பள்ளி வளாகத்தில்   15 அடி உயரத்தில் டவர் ஒன்று அமைக்கப்பட்டது.இதன் மீது ஏறிய சர்வஜித் அஷ்ட கோணாசனம் எனும் ஆசனத்தை தொடர்ந்து ஏழு நிமிடங்கள் 20 விநாடிகள்   நின்று யூனியன் உலக சாதனையில்  இடம் பிடித்தார்.இதற்கான நிகழ்வில் ரஷ்ய நாட்டில் இருந்து வந்த வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் யூனியன் மேலாளர் கிறிஸ்டோபர் டெய்லர் கிராஃப்ட்  சிறுவன் சர்வஜித் நாராயணின் சாதனையை நேரடியாக கண்காணித்தார்.

தொடர்ந்து சிறுவனின் சாதனை அங்கீகரித்த அவர்,வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்   யூனியன் உலக சாதனை பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். சிறுவன் சர்வஜித்திற்கு வேலம்மாள் கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் இயக்குனர் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் வேலம்மாள் போதி கேம்பஸ்  முதல்வர் ரேவதி,டீன் அனிதா, சிறுவனின் யோகா  பயிற்சியாளர்  வைஷ்ணவி, ஆகியோர் கலந்து கொண்டனர். 15 அடி உயரத்தில் கைகளை மட்டுமே பேலன்ஸ் செய்து சுட்டெரிக்கும் வெயிலில்  ஆங்கிள் போஸில்  யோகா செய்த   12 வயது சிறுவனின்   இந்த உலக  சாதனையை அவரது பள்ளியில் பயலும் சக மாணவர்கள் ஆசிரியர்கள், ஊழியர்கள் பலரும் கைகளை தட்டி உற்சாகபடுத்தினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe