கணபதி நெரிசலுக்கு கிடைக்குமா விடியல்?

published 7 months ago

கணபதி நெரிசலுக்கு கிடைக்குமா விடியல்?

கோவை: ஒருவழியாக கோவை கணபதி பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர்.

கோவையின் முக்கிய சாலைகளுள் ஒன்று சத்தி சாலை. கோவையில் அதிக விபத்துகள் நடைபெறும் ப்ளாக் ஸ்பாட்டுகளில் இன்று இந்த சாலை. இந்த சாலையில் கணபதி பகுதி வருகிறது.

இங்கு சாலை குறுகலாக உள்ளதால் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவித்து வருகின்றனர்.

இதனிடையே இந்த சாலையை விரிவாக்கம் செய்ய கடந்த 2020ம் ஆண்டு முடிவெடுக்கப்பட்டது. அதற்கான நிலமெடுப்பதற்கு, நகர ஊரமைப்புத் துறையிடமிருந்து, அதாவது அப்போதிருந்த உள்ளூர் திட்டக்குழுமத்திடம் நிதியைப் பெற தீர்மானிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்தும் கணபதி வேலன் தியேட்டரில் இருந்து, சூர்யா மருத்துவமனை வரை, இருபுறமும் சாலை விரிவாக்கம் செய்ய மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த சாலையை விரிவாக்கம் செய்ய 151 பேரிடம் இருந்து 73,250 சதுர அடி நிலம் கையகப்படுத்த வேண்டுமென்று கணக்கிடப்பட்டது. இதனை ஏற்ற தமிழக அரசு, ரூ.38 கோடியே 64 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்து, கடந்த 2021ல் அரசாணை வெளியிட்டது.

ஆனால், அந்த பணி முழுவதும் கிடப்பில் போடப்பட்டது. அதிகாரிகள் யாரும் இது குறித்து வாய் திறக்காமல் மவுனித்து வந்தனர்.

இதனிடையே தற்போதைய கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர், கோவை தொகுதி எம்.பி. இன்று கணபதி பகுதியில் சாலை விரிவாக்கம் செய்வதற்கு கள ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வு நடத்திச் சென்றுள்ள அதிகாரிகள் இந்த விஷயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெரிசலில் சிக்கித்தவிக்கும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe