கோவையில் இருந்து அபுதாபிக்கு விமான சேவை- எப்போது இருந்து தெரியுமா?

published 7 months ago

கோவையில் இருந்து அபுதாபிக்கு விமான சேவை- எப்போது இருந்து தெரியுமா?

கோவை: சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டம் பொருளாதார வளர்ச்சியில் தன்னை பெரிதும் நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. இங்கு பல தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதனால் இங்கே விமான சேவையை தொழிலதிபர்கள் பெரிதும் நம்பியுள்ளனர். மேலும் சரக்கு ஏற்றுமதியும்  இறக்குமதியும் நடக்கின்றன.

இந்நிலையில் சென்னைக்கு அடுத்தபடியாக சர்வதேச விமான நிலையமாக செயல்படும் கோவையில் இருந்து டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு போன்ற பல மாநிலங்களுக்கும், சிங்கப்பூர், ஷார்ஜா போன்ற நாடுகளுக்கும் இடையே விமான போக்குவரத்து செயல்பட்டு வருகிறது. அதுமட்டும் இல்லாமல் கோவை விமான நிலையத்தில் இருந்து 30க்கும் மேற்பட்ட விமான சேவைகள் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது.

இதனிடையே ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து, அபுதாபிக்கு விமான சேவை தொடங்குவதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.வாரத்தில் மூன்று நாட்கள் இயங்க உள்ளதாகவும் காலை 7.30 மணிக்கு கோவை விமான நிலையத்தில் புறப்படும் இண்டிகோ விமானம், பிற்பகல் 11:30 மணிக்கு அபுதாபி சென்றடையும் என தெரிவித்துள்ளது.

அதே போல் அபுதாபியில் பிற்பகல் 1 மணிக்கு கிளம்பும் இண்டிகோ விமானம், மாலை 6.30 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடையும் என தெரிவித்துள்ளது.இந்த புதிய விமான சேவையால் கோவை தொழில்துறையினர் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe