மதம் மாற்ற செய்வதாக கூறி வாலிபரை தாக்கிய இந்து முன்னணி நிர்வாகி கைது

published 2 years ago

மதம் மாற்ற செய்வதாக கூறி வாலிபரை தாக்கிய இந்து முன்னணி நிர்வாகி கைது

கோவை: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்பென்டி லெப்ரசன்(33). இவர், கடந்த 6-ம் தேதி கோவைக்கு வந்தார். நண்பர்கள் ராஜசேகர், செல்வம் ஆகியோருடன் நஞ்சுண்டாபுரத்தில் உள்ள கோல்டன் நகருக்கு உறவினரை சந்திக்கச் சென்றார். அப்போது நஞ்சுண்டாபுரம் மேம்பாலம் அருகே, நஞ்சுண்டாபுரம் கிழக்கு தேவேந்திர வீதியைச் சேர்ந்த உத்தமன்(31) என்பவர் அங்கு வந்தார். உத்தமன் இந்து முன்னணி இயக்கத்தின் பொதுசெயலாளர் ஆவார். அவ்வழியாக வந்த ஸ்பென்டி லெப்ரசனை, உத்தமன் தடுத்து நிறுத்தி  மதமாற்றம் செய்ய வந்ததாக கூறி அவதூறாக வார்த்தைகளை பேசி தகராறு செய்துள்ளார்.

மேலும்,  ஆத்திரமடைந்த உத்தமன் அவர்களை தாக்கியுள்ளார். இதுகுறித்து ஸ்பென்டி லெப்ரசன் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போத்தனூர் காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் உத்தமன் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  இதற்கிடையே, காவல்துறையினர் உத்தமன் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக கூறி இந்து முன்னணி அமைப்பினர் போத்தனூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். சிறிது நேரத்துக்கு பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe