தமிழ்நாடு துணிநூல் துறையில் வேலை: 9 பணியிடங்கள்... 8ம் வகுப்பு தகுதி!

published 7 months ago

தமிழ்நாடு துணிநூல் துறையில் வேலை: 9 பணியிடங்கள்...  8ம் வகுப்பு தகுதி!

தமிழ்நாடு அரசின் துணிநூல் துறை சார்பில் கைத்தறி ஏற்றுமதி அபிவிருத்தி கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் நிரந்தர பணி நியமனம் அடிப்படையில் 9 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.  அதன்படி, ஊர்தி ஓட்டுனர் (2), அலுவலக உதவியாளர் (7) பணி அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

ஊர்தி ஓட்டுனர் பணிக்கு 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மாதம் ரூ. 19,500 – 71,900  வரை சம்பளம் வழங்கப்படும்.

அலுவலக உதவியாளர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  மாதம் ரூ. 15,700 – 58,100  வரை சம்பளம் வழங்கப்படும்.

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
https://tntextiles.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட்  எடுத்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 29.07.2024 ஆகும்.

முகவரி: துணிநூல் துறை, கைத்தறி ஏற்றுமதி அபிவிருத்தி கழகம், முதல் மற்றும் இரண்டாம் தளம், 34, கதீட்ரல் தோட்ட சாலை, நுங்கம்பாக்கம், சென்னை – 600034

இந்த பணியிடங்கள்  தொடர்பாக மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள  என்ற https://tntextiles.tn.gov.in/ இணையதளப் பக்கத்தை காணவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe