கோவை தடாகம் பகுதியில் 2 சிறுத்தைகள் நடமாட்டம்- வைரல் வீடியோ காட்சிகள்...

published 7 months ago

கோவை தடாகம்  பகுதியில் 2 சிறுத்தைகள் நடமாட்டம்- வைரல் வீடியோ காட்சிகள்...

கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள பேரூர், தொண்டாமுத்தூர்,  நரசீபுரம், தடாகம் போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்  நாள்தோறும் காட்டு யானைகள் உணவுக்காக ஊருக்குள் மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை பொருள்களை சேதப்படுத்தி வந்து கொண்டு உள்ளது. 

 

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருஞ்சிறுத்தை மற்றும் சிறுத்தை அப்பகுதியில் கோழி, ஆடு, மாடு போன்ற வளர்ப்பு விலங்குகளை வேட்டையாடி சென்றது. இந்நிலையில் கடந்த வாரம் தொண்டாமுத்தூர் வண்டிக்காரன் புதூர் பகுதியில் வளர்ப்பு ஆடுகளை மர்ம விலங்கு வேட்டையாடி சென்றதாக வனத்துறையினர் நவீன கேமராக்களை பொருத்து கண்காணித்து வந்தனர். அதில் எந்த காட்சியும் பதிவாகவில்லை. 

இந்நிலையில் தடாகம் அருகே திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இரண்டு சிறுத்தைகள் நடமாடும் செல்போன் வீடியோ அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் பதிவு செய்து உள்ளனர். இதனால் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

இதனை அடுத்து வனத்துறையினர் சமீப காலமாக இரவு நேரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளை வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தி எச்சரிக்கை விடுத்து இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtube.com/shorts/u9_XKMZl1Ec?feature=share

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe