காமெடி கதை தேவை: கோவையில் நடிகர் பிரசாந்த் பேட்டி!

published 7 months ago

காமெடி கதை தேவை: கோவையில் நடிகர் பிரசாந்த் பேட்டி!

கோவை: முழு நேர காமெடி படம் செய்யத் தயாராக இருப்பதாக நடிகர் பிரசாந்த் கோவையில் தெரிவித்துள்ளார்.

கோவையில் தனியார் நிகழ்ச்சியில் நடிகர் பிரசாந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நான் நடித்த அந்தகன் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது. அந்தகன் படத்தில் நடித்தவர்கள் அனைவருக்கும் நன்றிகள். கோட் படத்திற்காக மூன்று பேருக்கு நன்றி தெரிவித்துள்ளேன்

கடந்த காலங்களிலும் மல்டி ஸ்டார் படம் செய்து உள்ளேன். தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான போட்டி இருப்பது நல்லது. என் மீது அன்பு கொண்ட ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நல்ல கதை இருந்தால் முழு நேர காமெடி படம் செய்யத் தயார். எனது அப்பா திறமையான இயக்குநர், டெக்னாலஜி கற்றுக் கொண்டு அவற்றை தனது படங்களில் பயன்படுத்தியுள்ளார். 2026 தேர்தலில் மக்களுக்கு யார் நல்லது பண்றாங்களோ அவர்களுக்கு ஆதரவளிப்பேன் என தெரிவித்தார். என்றார்.

இந்தியன் 2 படம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "ஒரு படம் எல்லாருக்கும் பிடிக்கவேண்டும் என்பது இல்லை. அது அவர்களின் கருத்து. கருத்து யார் வேண்டுமானால் சொல்லலாம்." என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe