மேட்டுப்பாளையம் அருகே 13 அடி நீளமுள்ள அரியவகை ராஜநாகம் மீட்பு…

published 7 months ago

மேட்டுப்பாளையம் அருகே 13 அடி நீளமுள்ள அரியவகை ராஜநாகம் மீட்பு…

கோவை: கோவை, மேட்டுப்பாளையம் அடுத்து உள்ள பாலப்பட்டி பகுதி வனப் பகுதியை ஒட்டி அமைந்து உள்ளது. இதனால் அவ்வப் போது காட்டு யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் ஊருக்குள் வருவது வழக்கம்.

இந்த நிலையில் பாலப்பட்டி எம்.ஜிஆர் நகர் பகுதியில் ராஜநாகம் ஒன்று ஊர்ந்து செல்ல முடியாத நிலையில் இருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் சிறுமுகை வனச்சரகர் மனோஜ் குமாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். உடனடியாக அங்கு சென்ற சிறுமுகை வனச்சரகர் மனோஜ் குமார் தலைமையிலான வனத் துறையினர் மற்றும் காஜாமைதீன் தலைமையிலான பாம்பு பிடி வீரர்கள் அப்பகுதிக்கு விரைந்து வந்து ராஜநாகத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

அரியவகை மற்றும் கொடிய விஷமுள்ள ராஜநாகத்தை நெருங்குவது சற்று கடினம் என்ற நிலையிலும் சாமர்த்தியமாக பாம்பு பிடி வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி ராஜநாகத்தை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து பாம்பின் உடல்நிலை குறித்து வனத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, உணவு எதுவும் உட்கொள்ளாததால் சோர்வான நிலையில் பாம்பு இருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து உரிய முதலுதவிக்கு பின்னர் பிடிபட்ட ராஜநாகத்தை வனத் துறையினரின் உதவியுடன் பாம்பு பிடி வீரர்கள் குஞ்சப்பனை அடர் வனப் பகுதியில் பத்திரமாக விடுவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe