கருணை கொலை செய்ய கோவை கலெக்டரிடம் மூதாட்டி மனு!

published 6 months ago

கருணை கொலை செய்ய கோவை கலெக்டரிடம் மூதாட்டி மனு!

கோவை: கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.

இதில் பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் தங்களது குறைகள் தொடர்பான கோரிக்கை மனுவை கலெக்டரிடம் அளித்து வருகின்றனர்.

இதே போல் இன்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில், கோயம்புத்தூர் கே.ஜி. போஸ் நகரை சேர்ந்த 70 வயதான மூதாட்டி வசந்தா என்பவர் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

என்னிடம் விமலா கீர்த்தி மற்றும் நான்கு பேர் சேர்ந்து 14 பவுன் நகை வாங்கி மோசடி செய்தனர். இது குறித்து நான் சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன்.

புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் முறையான விசாரணை செய்யாமல் குற்றவாளிகளை தப்பிக்க வைக்க முயற்சி நடக்கிறது.

அதற்கு ஏற்ற வகையில் குற்ற பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு உடந்தையாக உள்ள காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த பிப்ரவரி மாதம் 10ம் தேதி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தேன்.

ஆனால் எனது புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநகர போலீஸ் கமிஷனர் சிங்காநல்லூர் காவல் நிலைய அதிகாரிகளை நேரில் அழைத்து எச்சரிக்கை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதற்கு மேலும் எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. எனவே என்னை கருணை கொலை அல்லது தற்கொலை செய்ய அனுமதிக்க மாவட்ட கலெக்டர் உத்திரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe