வெடிபொருட்கள், அவுட்டுக்காய், மின்சாரம் தாக்கி வன உயிரினங்கள் உயிரிழக்கும் நிகழ்வு- தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு ஆலோசனை...

published 6 months ago

வெடிபொருட்கள், அவுட்டுக்காய், மின்சாரம் தாக்கி வன உயிரினங்கள் உயிரிழக்கும் நிகழ்வு- தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு ஆலோசனை...

கோவை: கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வனஉயிரினங்கள்  வெடிபொருள்/அவுட்டுக்காய் மற்றும் மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த மாவட்ட அளவிலான குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ்  விவசாயிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கோவை வனக்கோட்டத்திற்குட்பட்ட வனச்சரகங்களில் வனக்களப்பணியாளர்கள் மற்றும் மின்வாரிய பணியாளர்களுடன் இணைந்து
தொடர்ச்சியாக வனங்களை ஒட்டி உள்ள பகுதியில் கூட்டுத் தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தணிக்கையின் போது தாழ்வாக உள்ள மின் கம்பிகள் மற்றும் சாய்வான சேதமடைந்த மின்கம்பிகள் ஆகியன கண்டறியப்பட்டு உடனுக்குடன் சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் 2023 முதல் 30 ஜூன் 2024 வரை சுமார் 2000 எண்ணிக்கையிலான தாழ்வான மின் கம்பிகள் மற்றும் சேதமடைந்த சாய்வான மின்கம்பங்கள் கண்டறியப்பட்டு சரிசெய்யபட்டுள்ளன. மேலும், முற்றிலும் சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றி அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.வனங்களை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் உள்ள மின்வேலிகளையும் மின்வாரிய பணியாளர்களுடன் ஆய்வு செய்து அனுமதிக்கப்பட்ட அளவிலான மின்னழுத்தம் தான் பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது.

கோவை வனக்கோட்டத்திற்குட்பட்ட வனச்சரகங்களில் வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் அவுட்டுக்காய் (நாட்டு வெடி) பயன்படுத்தி வனஉயிரினங்கள் வேட்டையாடுவதை தவிர்க்கும் பொருட்டு காவல் துறையுடன் இணைந்து தொடர் களத்தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கோவை வனக்கோட்டத்தில் கடந்த ஓராண்டில் அவுட்டுக்காய் பயன்படுத்தி வேட்டையாடிய குற்றத்திற்காக 6 வனக்குற்ற வழக்குகள் பதிவு செய்தும், அவுட்டுக்காய் பயன்படுத்தியதற்காக வெடிபொருள் கையாண்ட குற்றத்திற்காக காவல் துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, மாவட்ட தீயணைப்பு மற்றும் தொழிற்துறை பாதுகாப்பு குழுகூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தீ மற்றும் தொழில்துறை பாதுகாப்பு தொடர்பான நிலையான
செயல்பாட்டு நடைமுறையின் அமலாக்கத்தைக் கண்காணிக்கவும். தீ விபத்துகளைத் தடுப்பது குறித்து உரிமம் வைத்திருப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தீ விபத்துகளை தடுப்பதற்கும் தணிப்பதற்கும் சமூகப் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் நடத்திட சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி
அறிவுறுத்தினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe