மத்தியில் பா.ஜ.க மூன்றாவது முறையாக ஆட்சியமைத்த பின் முதன் முறையாக அமைச்சர் நிர்மலா இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
முன்னதாக அவர் தனது அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மத்திய பட்ஜெட்டில் அமைச்சர் நிர்மலா வாசித்த முக்கிய அம்சங்களை இங்கு காணலாம்:
வேளாண் துறைக்கு 1.52 லட்சம் கோடி
வேலைவாய்ப்பு, கல்வி, திறன் மேம்பாட்டிற்கு ரூ.1.45 லட்சம் கோடி
ஊரக வளர்ச்சிக்கு ரூ.2.66 லட்சம் கோடி
மகளிர் மேம்பாடிற்கு ரூ.3 லட்சம் கோடி
வீட்டுவசதித் துறைக்கு ரூ. 2.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- வேர்க்கடலை, கடுகு, எள் போன்ற எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தன்னிறைவு பெற நடவடிக்கை.
- மாநில அரசுகள் ஒத்துழைப்போடு வேளாண்துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் நிறைவேற்றப்படும்.
- தொழிற்சாலைகளுடன் இணைந்து பெண்களுக்கு விடுதிகள் அமைக்கப்படும்.
- தங்கம் வெள்ளிக்கு சுங்கவரி 6 % ஆகவும், வைரத்திற்கு 6.4% ஆகவும் வரி குறைப்பு
- பெண்களுக்கு தனித்திறன் மேம்பாடு பயிற்சியும் வழங்கப்படும்.
- நெருக்கடியில் இருக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிருவனங்களுக்கு கடன் வழங்கப்படும்.
- உற்பத்தி துறை நிறுவனங்களுக்கு ரூ.100 கோடி கடன் உத்தரவாதம்.
சாலையோர வியாபாரிகளுக்கு முத்ரா கடன் மூலம் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி ரூ.20 லட்சம் வழங்கப்படும்.- நகரங்கள், கிராமங்களிலும் மேலும் 3 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்படும்.
- செல்போன்கள் மற்றும் அதன் உதிரி பாகங்கள் மீதான இறக்குமதி வரி 15%ஆக குறைக்கப்படுகிறது.
- நாட்டில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.11 லட்சம் கோடி ஒதுக்கீடு.
- தனியார் நிறுவனங்களுடன் இணைந்து சிறு அணு மின் நிலையங்கள் அமைக்கப்படும்.
- மாசு ஏற்படுத்தாத எரிபொருட்களை பயன்படுத்துவோர் ஊக்கப்படுத்தப்படுவர்.
- பத்திரப்பதிவு கட்டணங்களை மாநில அரசுகள் குறைக்க வேண்டும்

பீகாருக்கு ஜாக்பாட்
- பீகாரில் உள்ள புராதன கோயில்களும், நாளாந்த பகுதியும் உலகத்தரம் மிக்க சுற்றுலாத் தலங்களாக்க நடவடிக்கை.
- பீகாரில் பாசனத்திற்கும், வெள்ள பாதிப்பை தடுக்கவும் திட்டங்கள்; புதிய விமான நிலையங்கள்.
- பீகாரில் சாலைகள், மேம்பாலங்கள், மருத்துவக்கல்லூரிகள், விமான நிலையங்கள் அமைக்கப்படும்.
- பீகாரில் புதிய தொழில்துறை முனையம் அமைக்கப்படும்.
- நடப்பாண்டில் நிதி பற்றாக்குறை 4.9% ஆக உள்ளது; அடுத்தாண்டு 4.5% ஆக குறையும்.
- விண்வெளி சார்ந்த திட்டங்களுக்கு ரூ.1,000 கோடி
வரி குறைப்பு
- சில மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் புற்றுநோய்க்கு பயன்படுத்தும் 3 மருந்துகளுக்கு இறக்குமதி வரி ரத்து செய்யப்படும்.
- சோலார் மின் உற்பத்தி கருவிகளின் உதிரிபாகங்களுக்கு வரி குறைப்பு.
- வரி சலுகை பெறுவதற்கான நிரந்த கழிவு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாக அதிகரிப்பு.
- பிளாஸ்டிக் பொருட்களுக்கு இறக்குமதி வரி உயர்வு.
- இணைய வர்த்தகத்திற்கான வரி குறைக்கப்படுகிறது.
- இறக்குமதியாகும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு வரி உயர்கிறது.
- வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 40% லிருந்து 34% ஆக வரி குறைப்பு.
- குறிப்பிட்ட சில தோல் பொருட்கள் மீதான வரிகள் குறைப்பு.
- இறக்குமதியாகும் வைரக்கற்கள் பாதுகாப்புக்கு துறைமுக வசதி.
- அறக்கட்டளைகளுக்கு ஒரே வரிமுறை.
- டி.டி.எஸ்., தாக்கல் தாமதம் இனி கிரிமினல் அல்ல. குற்றமாக கருதப்படாது.
- தனி நபர் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை.
ஆகியவை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அம்சங்களாக உள்ளன.