100 அடி ரோட்டை ஒருவழிப் பாதையாக மாற்றலாமா? கருத்துக் கேட்கிறது போலீஸ்!

published 6 months ago

100 அடி ரோட்டை ஒருவழிப் பாதையாக மாற்றலாமா? கருத்துக் கேட்கிறது போலீஸ்!

கோவை: கோவை மாநகரத்தில் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதாலும், போக்குவரத்து நெரிசல் காரணமாகவும், வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

100 அடி சாலையில் இருந்து சிவானந்தாகாலனி செல்லக்கூடிய வாகனங்கள், காந்திபுரம் 100 அடி ரோடு ஷீலா மருத்துவமனை சந்திப்பில் இருந்து இடது பக்கம் திரும்பி கொங்குநாடு மருத்துவமனை, கிராஸ்கட் ரோடு, வடகோவை மேம்பாலத்தின் வலது பக்கம் சர்வீஸ் ரோட்டில் திரும்பி பவர்ஹவுஸ் சென்றடைந்து, சிவனந் தாகாலனி மற்றும் 100 அடி ரோட்டிற்கு செல்லலாம்.

இந்த சாலையை ஒருவழி பாதையாக மாற்றுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து கருத்துகள் வரவேற்கப்படுகிறது. பொதுமக்களின் கருத்துக்களை வரும் 31ம் தேதிக்கு முன்பு 0422-2212567 என்ற எண்ணில் அல்லது [email protected] தெரிவிக்க வேண்டும் என மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் தேவையா/இல்லையா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய: https://whatsapp.com/channel/0029VaBGFq7JZg4EvHELBx3R/467

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe