நாமோ ட்ரோன் திட்டத்தின் கீழ் கோவையில் முதல் விவசாய ட்ரோன்- பயனடைந்த பெண் விவசாயி...

published 6 months ago

நாமோ ட்ரோன் திட்டத்தின் கீழ் கோவையில் முதல் விவசாய ட்ரோன்- பயனடைந்த பெண் விவசாயி...

கோவை: மத்திய அமைச்சரைவில் 15,000 ட்ரோன்களை மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்குவதற்கு நாமோ ட்ரோன் திதி என்ற திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக 1261 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நாடு முழுவதும் உள்ள 1095 மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு விவசாயத்திற்கு பயன்படுத்தக்கூடிய ட்ரோன் பயிற்சி மற்றும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.  

 

அதில் தமிழ்நாட்டை சேர்ந்த 44 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி மற்றும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாவட்டம் பொள்ளாச்சி (வடக்கு) வட்டாரம் ராமபட்டினம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் பத்ரகாளி அம்மன் மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த வசந்தாமணி என்பவருக்கு ட்ரோன் பயிற்சி வழங்கப்பட்டு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வயல்வெளிகளில் திரவ உரங்கள், இயற்கை சார்ந்த மீன் அமிலம் போன்ற பொருட்களை தெளிக்கலாம். இதன் மதிப்பு சுமார் ஆறு முதல் எட்டு லட்சம் ஆகும்.

வசந்தாமணி அவரது பகுதியில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இவரை மகளிர் திட்ட அலுவலர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இவருக்கு சென்னையில் டிரோன் பயிற்சியும் அதற்கான உரிமமும் அளிக்கப்பட்டு ட்ரோன் வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் மாவட்ட ஆட்சியர் முன்பு ட்ரோனை இயக்கி காண்பித்தார்.

இதனை இவர்கள் விவசாயிகளுக்கு வாடகைக்கு விடலாம். அதன் மூலம் இவர்களுக்கும், PLF கூட்டமைப்புக்கும் வருமானம் கிடைக்கும், விவசாயிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe