தங்க நகையை குப்பையில் போட்ட பெண்மணி- மீட்டு கொடுத்த தூய்மை பணியாளர்...

published 6 months ago

தங்க நகையை குப்பையில் போட்ட பெண்மணி- மீட்டு கொடுத்த தூய்மை பணியாளர்...

கோவை: கோவையை அடுத்த கோவைப்புதூரை சேர்ந்தவர் சிவகாமி (47). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர் தனது 6 பவுன் தங்க நகையை ஒரு கவறில் போட்டு வைத்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நகை போட்டு வைத்திருந்த கவரை அவர் தவறுதலாக குப்பையில் போட்டு தூய்மை பணியாளர்களிடம் கொடுத்துள்ளார்.‌ 

 

பின்னர் சிறிது நேரத்தில் அவர் தனது நகையை தேடி பார்த்த போது தான் அவருக்கு குப்பையில் நகையை போட்டது நியாபகம் வந்தது.‌ பின்னர் அவர் 98-வது வார்டு கவுன்சிலர் உதயகுமார் உதவியுடன் நகையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 

தூய்மை பணி மேற்பார்வையாளர் மணிகண்டன், தூய்மை பணியாளர்கள் ராணி, சத்யா, சாவித்திரி ஆகியோர் அப்பகுதியில் சேகரித்த 1½ டன் குப்பையை கீழே கொட்டி தங்க நகையை கண்டுபிடித்து சிவகாமியிடம் ஒப்படைத்தனர். 

குப்பையில் போட்ட நகையை மீட்டு கொடுத்த தூய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe