டிரஸ், பைக் எல்லாவற்றிலும் விழிப்புணர்வு வாசகங்கள்- மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லம் கட்ட போராடும் அவேர்னஸ் அப்பா...

published 6 months ago

டிரஸ், பைக் எல்லாவற்றிலும் விழிப்புணர்வு வாசகங்கள்- மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லம் கட்ட போராடும் அவேர்னஸ் அப்பா...

கோவை: திருப்பூர் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தேசம் காப்போம் அறக்கட்டளையை சேர்ந்தவர் அவேர்னஸ் அப்பா (எ) சிவசுப்பிரமணி. இந்த அறக்கட்டளையினர் 20 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளுக்காக சேவை செய்து வருகின்றனர்.

 

சிவசுப்பிரமணி  சாலை பாதுகாப்பு குறித்தும் பல ஆண்டுகளாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். மாற்றுத் திறனாளிகளுக்காக திருப்பூர் மாவட்டத்தில் சுமார் ஒரு கோடி மதிப்பில் இலவச காப்பகம் கட்ட வேண்டும் என்பதே தனது இறுதி ஆசை என கூறும்  இவர், இதற்காகவே  பல்வேறு மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் சென்று பொதுமக்களிடம் நன்கொடை திரட்டி வருகிறார்.

மேலும் இவர் அணிந்திருக்கும் உடை மற்றும் இவர் பயணிக்கும் பைக் முழுவதும் சாலை பாதுகாப்பு, உடல் நலம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களை அச்சிட்டுள்ளார்.

இவரது உடை மற்றும் பைக்கில் "இன்சூரன்ஸ் அவசியம், மிதவேகம் மிக நன்று, ரத்த தானம் சாலைக்கல்ல மனிதருக்கே, உறுப்பு தானம் செய்வோம், முக கவசம் அணிவோம், தோல்தானம் செய்வோம், கொரோனாவில் இருந்து காப்போம், போதை பயணம் தவிர்ப்போம்" ஆகிய  பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்காக பிச்சை எடுத்தாவது சேவை செய்வேன் என்ற பேனருடன் இருசக்கர வாகனத்தில் வலம் வரும் இவரை பொதுமக்களை சந்தித்து திருப்பூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச காப்பகம் அமைப்பதற்கு நன்கொடை திரட்டுகிறார்.

தற்போது கோவை வந்துள்ள இவர் நிதி திரட்டு வருகிறார்.
இது போன்ற உடைகளை அணிந்து கொண்டு செல்லும் பொழுது பொதுமக்கள் தன்னை வித்தியாசமாக பார்ப்பதாகவும் அதிகமானோர்  உதவி செய்வதாகவும் சில தன்னை விமர்சிப்பதாக கூறினார்.

இவருக்கு உதவி செய்ய விரும்புவோர் +91 7598691583 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe