கோவை: கோவையில் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அவிநாசிலிங்கம் மகளிர் கல்லூரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.
சுற்றுச்சூழலை பாதுகாக்க செல்போன் பயன்பாட்டின் மூலம் வெளியேறும் மாசுபாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனது செல்போன்களை அணைத்து வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து அனைத்து மாணவிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான உறுதி மொழியை எடுத்துக்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன்,கார்பன் அளவை எந்த வகையில் குறைக்க முடியும் என்பதை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் Virtual Tree Planting என்ற அடிப்படையில் , நாம் பயன்படுத்தும் பொருள்களின் பயன்பாட்டை குறைத்து அதன் மூலம் எப்படி கார்பன் அளவை குறைக்க முடியும் என்று ஏற்படுத்தப்பட்டது எனவும் 2500 மாணவிகள் 5 நிமிடங்கள் தங்கள் செல்போனை அனைத்து வைத்து 5 கிராம் கார்பணுடன் சமன் செய்யும் நிகழ்வை தொடங்கி உள்ளோம்.. இதனை தொடர்ச்சியாக அவர்கள் ஒரு வருடம் செய்யும்போது 182 மரங்கள் நடுவதற்கு சமமாகும் என்றார். 2070 க்குள் இந்தியா கார்பன் சமநிலை அடைய வேண்டும் என்கின்ற இலக்கை பிரதமர் மோடி வைத்துள்ளார். 2030 ஆம் ஆண்டுக்குள் நாம் பயன்படுத்தும் எரிபொருள்களில் பாதி non conventional energy source ஆக இருக்க வேண்டும் என்ற நோக்கில் 1 கோடி வீடுகளுக்கு சூரிய ஒளி மின் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் கூட மீண்டும் மஞ்சப்பை திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது என தெரிவித்த அவர்அந்த வகையில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள virtual tree plantation மிகுந்த மன நிறைவை அளிக்கிறது என்றார்.
முழுமையான பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க இயலாமல் உள்ளதென் கூறிய அவர் அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக சுட்டிக்காட்டினார். தன்னார்வை தொண்டு நிறுவனங்களும் முயற்சி எடுத்து வருகின்றன. மக்கள் பங்காளிப்பும் பிளாஸ்டிக் ஒழிப்பிற்கு தேவை எனவும் மக்கள் பங்களிப்பு இருந்தால் பிளாஸ்டிக் ஒழிப்பை சாத்தியம் ஆக்க முடியும், முடிந்தவரை இது போன்ற முயற்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என்றார்.
வெள்ளலூர் குப்பை கிடங்கு தீ விபத்தை ஒரு வாரத்தில் 27 லட்சம் செலவழித்ததாக கூறியுள்ளனர், அது எத்தனை பேர், எத்தனை நாட்கள், அப்படி உயரக அளவில் கொடுத்தார்கள் என்றால் எங்கிருந்து கொடுத்தார்கள் , அந்த costly ஆன தேநீர் உள்ளிட்ட பொருள்கள் கொடுப்பதற்கு மாநகராட்சிக்கு மனம் உள்ளதா? தொடர்பாக விரிவான தெளிவான விளக்கம் என்பதை கொடுக்க வேண்டும் என்றார். மேலும் மாநகராட்சியின் ஒரு சில நடவடிக்கைகள் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. கழிவறைகள் முறையாக தூய்மை செய்யப்படுவதாக தெரியவில்லை. குப்பை எடுப்பது போன்று தெரியவில்லை. என் தொகுதியில் தொகுதி மேம்பாட்யு நிதியில் பூங்கா அமைத்து கொடுத்திருந்தோம். ஒரு சில நாட்கள் கழித்து சென்று பார்க்கும் போது மிகவும் மோசமான நிலையில் இருந்தது . கேட்டால் டெண்டர் எடுத்தவர் வேலை செய்தாகவே தெரியவில்லை என்கின்றனர். இதுதான் தற்போதைய பூங்காக்களின் நிலையாக உள்ளது என குற்றம் சாட்டினார். பணம் மட்டும் சென்று கொண்டே இருக்கிறது, இந்த பணமெல்லாம் எங்கே எல்லாம் செல்கின்றது திராவி மாடல் ஆட்சியில் இருப்பவர்கள் கண்டுபிடித்து கூற வேண்டும் என கூறினார்.
ஒரே நாளில் சில தீர்மானங்கள் குறித்து விவாதம் வேண்டாம் என்பதற்காக ஒரே நாளில் 300 க்கும் ஏற்பட்ட தீர்மானங்களை நிறைவேற் இருக்கலாம். ஒரு சிலவற்றை மக்களின் பார்வையில் இருந்து மறைக்க வேண்டும் என்பதற்காக செய்திருக்கலாம். திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதெல்லாம் ஆட்சி பொறுப்பு இருக்கிறதோ அப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீரழியம் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும் என்றார். முதலமைச்சர்கள் தான் மாறி இருக்கிறார்கள் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் செயல்பாடுகள் மாறவில்லை என்பதை இந்த சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் தெரிய வரும் என தெரிவித்தார்.
புதிய புதிய குற்றங்கள் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கின்றன, அவற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் அரசு என்ன எடுத்தது என்பது தான் கேள்வி என்றார்.
மேலும் அதிகாரிகளை மாற்றம் செய்து கண்துடைப்பு செய்வது அரசின் வேலை அல்ல என்றார்.
மாநில பட்ஜெட்டில் அனைத்து மாவட்டங்களின் பெயர்களும் கூறப்படுவதில்லை எனவும் இதற்கு முன்பு நடைபெற்ற பட்ஜெட்டில் கூட அனைத்து மாநிலங்கள் பெயரும் குறிப்பிடப்படவில்லை. அறிவிக்கும் திட்டங்களில் நம் மாநிலத்திற்கு எவ்வளவு வந்துள்ளது என்றார்.
திராவிட முன்னேற்ற கழக கூட்டணி கட்சிகளுக்கு முழுக்க முழுக்க அரசியலுக்காக , பாஜக கூட்டணி குறித்து ஏதாவது கூற வேண்டும், மோடியைப் பற்றி திட்டினால் தான் அவர்களுக்கு அரசியல் வாழ்க்கையை முடிவு செய்து வைத்துள்ளார்கள் அதனால் எது என்றாலும் இப்படித்தான் கூறுவார்கள் என விமர்சித்தார்.
தமிழ் தமிழ்நாடு அகநானூறு புறநானூறு என எல்லாம் சரி. தமிழக முதல்வர் மாதம் ஒருமுறை பிரதமரை ஏதாவது ஒரு அரசு நிகழ்ச்சிக்கு அழையுங்கள் யார் வேண்டாம் என கூறினார்கள். எத்தனை வருடங்கள் மத்திய அரசு கொடுக்கிற அல்லவா அதனை தொடங்கி வைக்க பிரதமரை அழையுங்கள். ரேஷன் கடையில் அரிசி கொடுக்கிறோம் அது கொடுக்கும் திட்டத்திற்கு பிரதமரை அழையுங்கள். தாராளமாக அவர் வருவார் எனவே தேர்தல் சமயத்தில் எல்லா மாவட்டங்களுக்கும் ஸ்டாலின் சென்ற போர் செல்கிறாரா காணொளி வாயிலாக மட்டுமே தொடங்கி வைக்கிறார் என்றார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் அண்ணாமலையும் கட்டியணைத்துக் கொண்டது சந்தோஷமாக பார்க்கிறேன் இரண்டு பேரும் இணைந்து இருந்ததை பார்க்கும் போது எவ்வளவு அற்புதமாக இருந்தது. அரசியலைக் கடந்த நாகரிகம் என்று பார்க்கும்போது அது ஒரு நல்ல விஷயமாக பார்க்கிறேன்.
தமிழ்நாட்டில் கிளை சிறைகள் என்பது குற்ற செயல் நடப்பதற்கு திட்டமிடுவதற்கான இடமாக சில சிறைகள் உள்ளன, எனவே அரசாங்கம் கிளைச் சிறகைகள் மூடுவது போன்ற நடவடிக்கைகளை முழுமையாக ஆராய்ந்து எடுக்க வேண்டும் என்றார்.
நடிகர் விஜய் மாநாடு நடத்துவது தொடர்பாக பேசிய பொது அரசியல் கட்சிகள் என்றால் மாநாடு நடத்துவது என்பது இயல்பு தானே. அவர் ஆரம்பித்து வரட்டும் பார்க்கலாம் என்றார். மேலும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் குறைவு என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக கூறியிருக்கிறார்கள் என்பதை பார்த்துவிட்டு பதில் கூறுகிறேன் என தெரிவித்தார்.