இரு விழி உனது... ராஷ்மிகா மந்தனா க்ளிக்ஸ்!

published 6 months ago

இரு விழி உனது... ராஷ்மிகா மந்தனா க்ளிக்ஸ்!

நடிகை ராஷ்மிகா மந்தனா பச்சை நிற ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் இருக்கும் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

தென்னிந்திய மொழி திரைப்படங்களில்  முன்னணி நாயகியாக ராஷ்மிகா வலம் வருகிறார். தற்போது பாலிவுட் படங்களிலும் கலக்கி வருகிறார். இந்திய அளவில் பிரபல நடிகையாக அறியப்பட்டு வருகிறார்.

கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி படம் மூலம் நாயகியாக  அறிமுகமானார் ராஷ்மிகா மந்தனா.  தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்ற ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் என அடுத்தடுத்து இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

தொடர்ந்து தமிழில்  கார்த்திக்கு ஜோடியாக சுல்தான், விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்தார்.  இந்த இரண்டு படங்களும் ராஷ்மிகாவை கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைய செய்தது.  ராஷ்மிகாவுக்கு பாலிவுட்டிலும் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. அங்கு குட் பாய் படம், மிஷன் மஜ்னு, அனிமல் படத்தில் நடித்தார்.  தற்போது புஷ்பா2, குபேரா படங்களில் நடித்து வருகிறார்.

இளைஞர்களின் நேஷனல் கிரஷ்ஷாக  வலம் வருகிறார். அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை   இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடிப்பார். அதன்படி,  பச்சை நிற ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் இருக்கும் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe