கோவை 'பிர்ஸ்பீ' போட்டியில் சென்னை அணி வெற்றி!

published 6 months ago

கோவை 'பிர்ஸ்பீ' போட்டியில் சென்னை அணி வெற்றி!

கோவை: கோவையில் முதல் முறையை நடைபெற்ற தேசிய அளவிலான 'பிர்ஸ்பீ' போட்டி சென்னை அணி வெற்றி பெற்றது.

கர்நாடகா அல்டிமேட் பிளேயர்ஸ் சங்கம், நோபிளை ஜோன் சார்பில் கோவையில் முதல் முறையாக ‘சக்கத் அல்டிமேட் ஓபன்' தேசிய அளவிலான பிரிஸ்பீ போட்டி, பீளமேடு, பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லூரி மைதானம், சரவணம்பட்டி - பர்ஸ்ட் கிக் சாக்கர் பள்ளி, 22 யார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம் ஆகிய இடங்களில் நடந்தது.

இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 40க்கும் மேற் பட்ட அணிகளை சேர்ந்த சுமார் 600 வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றனர்.

ஆண்கள் பிரிவில், சென்னை 600098 அணியினர் முதலிடம், டீன் டோர்னடோஸ் அணி இரண்டாமிடம் பிடித்த னர். சிறந்த அணிக்கான விருதை சென்னையை சேர்ந்த பிளிட்ஸ் அணி தட்டி சென்றது.

பெண்கள் பிரிவில், சென்னையை சேர்ந்த புயல் அணியினர் முத லிடம், சென்னையை சேர்ந்த ஸ்டால் 7 அணி இரண்டாமிடம் பிடித்தது. சிறந்த அணிக்கான விருதை, ஆரோவில் கிராஷ் வென்றது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe