கோவை, நீலகிரிக்கு ரெட் அலெர்ட்; திருப்பூர், திண்டுக்கல் மஞ்சள் அலெர்ட் | Rain alert

published 6 months ago

கோவை, நீலகிரிக்கு ரெட் அலெர்ட்; திருப்பூர், திண்டுக்கல் மஞ்சள் அலெர்ட் | Rain alert

கோவை: கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே கோவை மற்றும் நீலகிரியில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இன்று மிக கனமழைக்கான ரெட் அலெர்ட். இந்த இரண்டு மாவட்டங்களிலும் நாளையும், நாளை மறுநாளும், ஆகஸ்ட் 2ம் தேதியும் கனமழை பெய்யும் (மஞ்சள் அலெர்ட்).

திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று முதல் வரும் 2ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இச்செய்தியை கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்ட மக்களுக்கு பகிர்ந்து உதவிடுங்கள்
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe