தபால் துறை வேலைவாய்ப்பு: 10ம் வகுப்பு தகுதி... உடனே விண்ணப்பிங்க!

published 6 months ago

தபால் துறை வேலைவாய்ப்பு: 10ம் வகுப்பு தகுதி... உடனே விண்ணப்பிங்க!

இந்திய அஞ்சல் துறை சார்பில்  கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர்  பணியிடங்களுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இருந்தது. இதற்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே உள்ளதால், விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

தேசிய அளவில் தபால் அலுவலகங்களில் மேற்கண்ட பணியிடங்களில் 44,228 காலிப்பணியிடங்ள் நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாட்டில்  3,789 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள்  10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில்  தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடங்களுக்கு தேர்வு முறை இல்லை.

கிளை போஸ்ட் மாஸ்டர் பணிக்கு  ரூ.12,000 முதல் ரூ.29,380 வரையும், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பணிக்கு ரூ.10,000 முதல் ரூ.24,470 வரையும்  மாத சம்பளம் வழங்கப்படும்.

இப்பணியிடங்களுக்கு  ஆன்லைன் வழியாக மட்டுமே  விண்ணப்பிக்க வேண்டும். https://indiapostgdsonline.cept.gov.in/ என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பதாரர்கள்  விண்ணப்பிக்கலாம்.  

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 05.08.2024 ஆகும். இன்னும் சில நாட்களே விண்ணப்பிக்க அவகாசம்  உள்ள நிலையில், விருப்பம் உள்ளவர்கள் விரைந்து விண்ணப்பிப்பது நல்லது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe