சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்- கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை...

published 6 months ago

சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்- கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை...

கோவை: கோவை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நீர் நிலைகளில் மழை நீர் அதிகமாக வர துவங்கி உள்ளது. எனவே மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் உள்ள சுற்றுலா செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவுறுத்தி உள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டியுள்ள பகுதியான வால்பாறை, ஆனைமலை, மேட்டுப்பாளையம், பேரூர் மற்றும் மதுக்கரை ஆகிய வட்டங்களை சுற்றியுள்ள சுற்றுலா பகுதிகளான சின்னக்கல்லாறு, ஆழியாறு, சோலையாறு, கூலாங்கல்லாறு, அப்பர்நீரார், கீழ்நீரார், காடாம்பாறை, குரங்கு நீர்வீழ்ச்சி, கோவை குற்றாலம், பில்லூர், மற்றும் கீழ் பவானி ஆகிய இடங்களில் தற்போது தொடர் கனமழை பெய்து வருவதால் நிலச்சரிவு, நீரில் மூழ்குதல் போன்ற எதிர்பாரா நிகழ்வுகளை தவிர்க்கும் பொருட்டு பருவமழை காலங்களில் இப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என  
தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe