'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தின் ஓ.டி.டி., ரிலீஸ் எப்போது?

published 6 months ago

'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தின் ஓ.டி.டி., ரிலீஸ் எப்போது?

'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தின் ஓ.டி.டி. வெளியீடு எப்போது என தகவல் வெளியாகி உள்ளது.

நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2898 ஏடி படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன்  நடித்துள்ளனர். இந்த படம் பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ளது. படத்திற்கு  சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Kalki 2898 AD (2024) - Movie | Reviews, Cast & Release Date - BookMyShow

மகாபாரதம்  குருசேத்திர போர்  நடந்து 6000 வருடங்களுக்கு பின்  நடக்கும் கதையாக மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.  படம் வெளியான முதல் நாளில்  ரூ.180 கோடி வசூல் சாதனை படைத்தது.

உலகம் முழுவதும் கல்கி திரைப்படம் 1100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.  இரண்டாம் பாகம் வெளியீடு எப்போது என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.

Prabhas, Amitabh Bachchan, Vijay Deverakonda's Kalki 2898 AD Movie Review –  Firstpost

இந்நிலையில் படத்தின் ஓ.டி.டி., ரிலீஸ்  குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  இந்தி மொழி ஓ.டி.டி உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது. தென் இந்திய மொழி உரிமையை அமேசான் பிரைம் வாங்கியுள்ளது.
இந்த படம்  வரும் ஆகஸ்ட் 23ம் தேதி ஓ.டி.டி.,யில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe