வயநாடு பேரிடரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய சிவாஜி காலனி மக்கள்...

published 6 months ago

வயநாடு பேரிடரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய சிவாஜி காலனி மக்கள்...

கோவை: கோவை சிவாஜி காலனி பகுதியில் அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை அமைப்பின் சார்பாக கேரள மாநிலம் வயநாடு பகுதியில் உயிரிழந்தவர்களின் படத்திற்க்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.


கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பல்வேறு பகுதிகள் சேதமடைந்துள்ளது. 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து 4வது நாட்களாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி கோவை சிவாஜி காலனி பகுதியில் அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை அமைப்பின் சார்பாக வழக்கறிஞர் புஸ்பாணந்தம் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். 

மேலும் உயிரிந்தவர்களின் புகைப்படத்திக்கு மலர் தூவி அஞ்சிலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் தமிழலகன், லட்சுமி, திவ்யா, ஜெபா, வர்ஷா வர்ஷினி, மோகன் ராஜா, ஜெயமணி, முத்து, ஞானமணி, குமார், தனலட்சுமி, கோவில் மேடு பாலகிருஷ்ணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe