கோவையில் வட்டார வள பயிற்றுநர் இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு- தகுதிகள் என்னென்ன...?

published 6 months ago

கோவையில் வட்டார வள பயிற்றுநர் இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு- தகுதிகள் என்னென்ன...?

கோவை: கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்ககத்தின் கீழ், ஒவ்வொரு வட்டாரங்களிலும் 3 வட்டார வள பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. இப்பணியிடத்திற்கு  கல்வி மற்றும் அனுபவ தகுதிகளின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அதன்படி வட்டார வள பயிற்றுநர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தகுதி அளவுகோல்கள்:

மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 25 முதல் 45 வயதுடையவராக இருத்தல் வேண்டும் (01.08.2024 அன்று).

ஏதேனும் ஒரு பாடத்திட்டத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவராக இருத்தல் வேண்டும். 2 முதல் 3 வருடம் மகளிர் சுய உதவிக் குழு மற்றும் கூட்டமைப்பில் பணியாற்றிய அனுபவம் உடையவராக இருத்தல் வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் நபர் வட்டாரத்திற்குப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று பயிற்சியளிக்க ஆர்வமுள்ளவராகவும், ஒருங்கிணைத்து கண்காணிக்க கூடியவராகவும், நல்ல பேச்சுத் திறன் மற்றும் பயிற்சி கையாளும் திறன் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.

கணினியில் குறைந்தபட்சம் MS Word, Excel பயன்படுத்த தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.

இந்த தகுதிகள் உள்ளவர்கள் 07.08.2024 தேதிக்குள், இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், 2-வது தளம், பழைய கட்டிடம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், கோயம்புத்தூர் 641 018 என்ற முகவரிக்கு விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe