பருத்தி தொழில் பாதிக்க இதுவே காரணம்- இந்திய பருத்தி கூட்டமைப்பு தலைவர் தலைவர் கோவையில் பேட்டி...

published 6 months ago

பருத்தி தொழில் பாதிக்க இதுவே காரணம்- இந்திய பருத்தி கூட்டமைப்பு  தலைவர் தலைவர் கோவையில் பேட்டி...

கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள  சைமா அலுவலகத்தில் இந்திய பருத்தி கூட்டமைப்பு  தலைவர் துளசிதரன் செய்தியாளர்களை  சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது

இந்திய பருத்தி கூட்டமைப்பு சார்பில் அகில இந்திய அளவில்  கருத்தரங்கம் 9,10 ம் தேதிகளில்  நடத்தப்பட இருக்கின்றது எனவும் இதில் பல நாடுகளை சேர்ந்த தொழில் துறையினர் பங்கேற்க இருப்பதாகவும் இதில்  பருத்தி தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க இருப்பதாகவும் 
பல்வேறு நாடுகளில் இருக்கும் பருத்தி தொடர்பான விவகாரங்கள் குறித்து இந்த கருத்தரங்கில் விவாதிக்க இருக்கின்றோம் என்றார்.

தற்போது
இந்திய பருத்தி விலை அதிகம், மற்ற நாடுகளில் பருத்தி விலை  குறைவு எனவும், இதனால் ஜவுளித்துறை பாதிக்கப்பட்டு 
இருக்கின்றது எனவும் மத்திய அரசு இதை கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இந்த கருத்தரங்கில் பங்கேற்பவர்கள் பருத்தி தொடர்பான உலகளாவிய அறிவுகளுடன் திரும்பி செல்ல முடியும் எனவும், இது இநதிய பருத்தி கூட்டமைப்பின்  ஆறாவது கருத்தரங்கம் என்றார்.

தற்போது 
பருத்தி ஒரு கண்டி
57 ஆயிரம் ரூபாய் விலை இருக்கின்றது எனவும் இந்தியாவில்  பருத்தி உற்பத்தி குறைவு என்பதால்  விலை அதிகமாக இருக்கின்றது எனவும்பருத்தி விலை இன்னும் அதிகரிக்கும் என்பதால் கையிருப்பு பருத்தியை விற்பனையாளர்கள் விற்காமல் வைத்திருக்கின்றனர் எனவும் தெரிவித்த அவர்இதனால் பஞ்சாலை தொழில் பாதிக்கபடுவதாகவும் பஞ்சாலை தொழில் போன வருடம் மோசமாக இருந்தது, இந்த வருடம் சற்று முன்னேற்றமாக இருக்கிறது என கூறினார்.

பங்களா தேச நாட்டில் அரசியல் குழுப்பமான சூழல் நிலவுவதால் திருப்பூருக்கு ஏற்றுமதி வாய்ப்பு அதிகம் இருக்கின்றது.குறிப்பாக பங்களாதேச ஜவுளிக்கும், வியட்நாம் ஐவுளிக்கும் அமெரிக்காவில் வரி குறைவு, இந்திய ஐவுளிகளுக்கு வரி அதிகம் எனவும் பங்களாதேசத்தில் இருந்து ஆர்டர்களை கொண்டு வர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என  பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருப்பது குறித்த கேள்விக்கு, தமிழகத்தில் 
பஞ்சாலை தொழிலுக்கு
தமிழக அரசு நிறைய உதவிகள் செய்து கொண்டுதான் இருக்கின்றனர் என இந்திய பருத்தி கூட்டமைப்பு தலைவர் துளசிதரன் பதில் அளித்தார்.

பருத்திக்கு இறக்குமதிக்கு 11 சதவீதம் வரி விதிக்கின்றனர் என தெரிவித்த அவர்,
பருத்தி விளைச்சல் அதிகரிக்க அரசு எடுக்கும்   நடவடிக்கைகள் போதுமானதான இல்லை என தெரிவித்தார். இந்தியாவில் 49 மாவட்டங்களில் பருத்தி விளைகின்றது எனவும், அந்த மாவட்டங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

பருத்தி விளையும் 49 மாவட்டங்களில் கவனம் செலுத்தினால் , நாட்டில் பருத்தி உற்பத்தி
50 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கின்றது எனவும், உணவுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பருத்திக்கும் அரசு கொடுக்க வேண்டும் எனவும் மத்திய பிரதேச மாநிலத்தில்  ஒரு சில சலுகைகள் கொடுப்பதால் தமிழகத்தில் இருந்து சில கார்மென்ட் நிறுவனங்கள் அங்கு சென்று இருக்கின்றன என தெரிவித்த அவர், தமிழகத்தில்  இருக்கும் கலாச்சாரம்,
பாதுகாப்பு போன்றவை மத்திய பிரதேச மாநிலத்தில் இருக்காது எனவும் என துளசிதரன் தெரிவித்தார். அங்கு மின்சாரம் யூனிட் ரூபாய் 4.25  கொடுக்கின்றனர் எனவும் , இங்கு 9 ரூபாய் வரை யூனிட்டிற்கு வசூல் செய்யப்படுகின்றது எனவும் துளசிதரன் தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe