கோவை வருகிறார் ஸ்டாலின்!

published 6 months ago

கோவை வருகிறார் ஸ்டாலின்!

கோவை: கோவைக்கு நாளை வரும்  முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ் புதல்வன் திட்டத்தை துவக்கி வைக்க உள்ள நிலையில் நிகழ்ச்சி நடைபெறும் அரசு கலை கல்லூரி வளாகத்தை மாவட்ட ஆட்சியர்,மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.



கோவையில் நடைபெறும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை காலை விமானம் மூலம் கோவைக்கு வருகை தர உள்ளார்.நாளை காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வரும் அவருக்கு  கோவை விமான நிலையத்தில் திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

பின்னர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அப்போது  தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார்.இத்திட்டத்தின் மூலம் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள்,  அரசு உதவி பெறும் தமிழ் வழி  பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படவுள்ளது.

இதன் காரணமாக இலட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைய  உள்ளனர்.இந்நிலையில் நிகழ்ச்சி நடைபெற உள்ள அரசு கலை கல்லூரி வளாகத்தை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்,மாநகராட்சி ஆணையர் சிவ குரு பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe